Wednesday, June 27, 2007

அட்லாஸ்!

  1. வ.வா.சங்கத்துக்காக அட்லாஸாக ஒப்புக் கொண்டமைக்கு நன்றி.
  2. உங்களை தொடர்பு கொண்டு அட்லாஸாக பரிந்துரைத்த நபர் இனிமேல் PM என்று அழைக்கப்படுவார்(Post Manager). உங்களுக்கும் வ.வா.சங்கத்திற்கும் உறவுப்பாலமாக PM இருப்பார்.
  3. அட்லாஸாக ஒப்புக்கொண்ட மாதத்தில், நீங்கள் குறைந்த பட்சம் அதாவது வாரம் ஒன்று என்ற வீதம் 4 பதிவுகளாவது இடவேண்டும். PMன் ஆலோசனைப்படி அதிகம் பதிவுகள் இடுதலை வ.வா.சங்கம் வரவேற்கிறது.
  4. உங்கள் பதிவினை Draftல் சேமித்து வைத்துவிட்டு PMக்கு அறிவியுங்கள், உங்கள் பதிவுகளை வெளியிடும் உரிமை PMக்கே உண்டு. PM உங்கள் பதிவுகளை நீங்களாகவே வெளியிட அனுமதித்தால் கீழ்கண்ட விதிகளுக்கு உட்படுதல் வேண்டும். VVS Member has the complete rights on your post to remove immediately, if the post features (a) Violence, excessive use of vulgar or obscene language, adult content (nudity included), stories inciting sex, (b) Propaganda, potentially offensive or controversial content (c) Political, religious or charitable organizations, issues or causes, promote gambling, promote illegal activities, feature warez. (d) incisive of dangerous acts, terror and violence, or in violation of copyright law.
  5. நீங்கள் வ.வா.சங்க உறுப்பினராக இருக்கும் காரணத்தினால் உங்கள் பின்னூட்டங்கள் தானாகவே வ.வா.சங்கப் பதிவுகளில் வெளியிடப்படும், மட்டுறுத்தல் முடியாது என்கிற பட்சத்தில் உங்கள் பின்னூட்டங்கள் விதி 4 ன் கீழ் உட்படுதல் அவசியம்.
  6. வ.வா.சங்கத்தின் நோக்கமான நகைச்சுவைக்கு உங்கள் பதிவுகள் முக்கியத்துவம் அளிக்குமாறு வேண்டுகிறோம்.
  7. மேற்கண்ட விதிகளுக்கு உட்படாத உங்கள் பதிவுகளை எந்த நேரத்திலும் பதிவுகளை திருத்தவோ, பின்னூட்டங்களை நீக்கவோ வ.வா.சங்க உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு.
  8. உங்களுக்கு வ.வா.ச'வில் (அடிப்படை)Guest உரிமை மட்டுமே அளிக்கப்படும், பின்னூட்டங்கள் வெளியிடும் உரிமை வ.வா.சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு. முழு அதிகாரம் அளிக்க PM க்கு உரிமை உண்டு.
  9. மேற்பட்ட விதிகளுக்கு உட்பட்டு அட்லாஸாக செயல்பட வ.வா.சங்கம் அன்புடன் அழைக்கிறது, புரிதலுக்கு நன்றி.
  10. Labelல் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் மட்டுமே இடவும், வேறு எதையும் Labelஆக இடவேண்டாம். உதாரணம்: Kaippullai.

Sunday, June 17, 2007

சங்கம் குழுமம்

சங்கம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மக்களால் நடத்தப்படும் குழுமம். இதன் கீழ் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழ்ச்சங்கம், பயமறியா பாவையர் சங்கம் என்ற குழுமங்கள் பலதரப்பட்ட மக்களால் பல்வேறு நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறது.

  1. வ.வா.ச- இந்தக்குழுமத்தின் நோக்கம், சிரிப்பு சிரிப்பு சிரிப்பு வேறெதுவுமில்லை.
  2. தமிழ்ச்சங்கம்-தமிழால் ஒன்றுபடும் மக்கள், தமிழுக்காக சேவை செய்ய.
  3. ப.பா.ச-பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் சங்கம்

ஆயினும் எல்லாக்குழுமங்களுக்கும் பொதுவான உடன்பாடு என்னவெனில்

  • அரசியல், ஜாதி/மதம், வன்மம் எழுதாது இருத்தல்.
  • அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் எழுதுதல்.
Updated on 11-Jan-2008: சங்கமம் திரட்டியானது சங்கம் குழுமத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்குகிறது